பாகிஸ்தான் - துருக்கி - சவுதி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை: ஈரான் அறிவிப்பு
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், தெஹ்ரானுக்கு (ஈரானுக்கு) எதிராக அமைந்தது என அஞ்சத் தேவையில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், பிராந்திய நாடுகள் வெளிச்சக்திகளைச் சாராமல் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே இந்த ஒப்பந்தத்தைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்
பிராந்தியத்தின் புவிசார் மற்றும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, துல்லியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு செயற்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும், அப்பிராந்தியத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஸ்திரமின்மையை தடுக்கவும் உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவுதி அரேபியாவின் மக்கா நகரில் இடம்பெற்ற சந்திப்பில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகான் மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரால் இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்