இலங்கையில் டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(1) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 295.83ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 295.91 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், நேற்றையதினம் 304.15 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 304.29 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405.11 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 419.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347.33ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 360.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி216.15 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 224.76ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.14 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 201.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
