வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வரிக்கு பின்னர் இலங்கையில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன் விலை கொண்ட டொயோட்டா ரேய்ஸ் 1200 சிசி ஹைப்ரிட், இறக்குமதி செய்யும்போது 6.4 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கைக்கு டொயோட்டா ரேய்ஸை இறக்குமதி செய்வதற்கான விலை சுமார் 13.8 மில்லியன் ரூபாய்களாகும். எனினும் அது உள்ளூர் சந்தையில் சுமார் 16.5 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இறக்குமதி செலவு 15 மில்லியன்
ஹோண்டா வெசல் எக்ஸின் விலை ஜப்பானில் 8.8 மில்லியன் ரூபாய்கள், அதற்கு வரியாக 9 மில்லியன் விதிக்கப்படுகிறது. எனவே, வெசல் எக்ஸ் இறக்குமதி செய்வதற்கான விலை 17.8 மில்லியன் ரூபாயாகும்.
எனினும் அது இலங்கையில் 21 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தாய்லாந்திலிருந்து வரும் டொயோட்டா ஹிலக்ஸ் ஜிஆர் ஸ்போர்ட்டின் இறக்குமதி செலவு 15 மில்லியன் செலவாகும். இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது 13 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
மொத்த இறக்குமதி செலவு
வரிக்குப் பிறகு, டொயோட்டா ஹிலக்ஸ் இறக்குமதியின் விலை 28.5 மில்லியன், ஆனால் அது இலங்கையில் சுமார் 32 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.

ஜப்பானில் இருந்து 6.5 மில்லியன் மதிப்புள்ள டொயோட்டா யாரிஸ் கிராஸிக்கு, இறக்குமதி செய்யும் போது 8.9 மில்லியன் வரி விதிக்கப்படுகிறது.
எனவே அதன் மொத்த இறக்குமதி செலவு 15.4 மில்லியன் ஆகும், ஆனால் அது இலங்கையில் 19.5 மில்லியனுக்கு விற்கப்படுகிறது.
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ 250, வாகனம் 18 மில்லியன் ரூபாய்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, வரிக்கு பின்னர் இலங்கையில் 65 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
செருப்பால் அடித்து துரத்தப்பட்ட அருண் சித்தார்த்.. விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கு கடும் கண்டனம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri