கோட்டாபயவுக்கு குழிபறித்த அவரின் சகாக்கள் : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

Kamal Gunaratne Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Gota Go Gama
By Kanthan Feb 27, 2026 02:23 PM GMT
Report

கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அமெரிக்க புலனாய்வு பிரினருக்கு சார்பாக செயற்பட்டதாக அசங்க அபேகுணசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கோட்டாபய ராஜபக்ச இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.

அசங்க அபேகுணசேகர எழுதிய வின்ட்ஸ் ஒப் சேன்ஜ் (Winds of Change) (The Millennium Project, USA) நூலுக்காக மூன்று வருடங்கள் அதி முக்கிய நபர்களிடம் அவர்  பேட்டி எடுத்துள்ளார்.

அந்த வகையில் கோட்டாபயவுடன் அவரின் வீட்டில் இரண்டு மணிநேரம் நடந்த பேட்டியில் இந்த தகவல்களை குறிப்பிட்டதாக அசங்க தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட கருத்துக்களில் இருந்து தொகுக்கப்பட்ட விடயங்கள்,

புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....

புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....

அரச சார்பற்ற அமைப்பினர்

கோட்டாபய ராஜபக்சவின் சிந்தனைக் குழுவாகக் கருதப்பட்ட Pathfinder Foundation எனற அரச சார்பற்ற அமைப்பு மிலிந்த மொரகொடவால் தொடங்கப்பட்டது. அதில் அங்கம் வகித்தவர்களே கோட்டாபயவின் சுற்றி இருந்ததாக அசங்க அபேகுணசேகர மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அட்மிரல் ஜயநாத் கொழம்பகே அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்தார். அட்மிரல் ஜயநாத் கொழும்பகே இலங்கை கடற்படையின் 18வது கடற்படை தளபதியாக பணியாற்றியதுடன், பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிவிவகார ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

கோட்டாபயவுக்கு குழிபறித்த அவரின் சகாக்கள் : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் | Gotabaya Rajapaksa Cia Central Intelligence Agency

மேலும், CIA-வால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபராக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டவர் அவரது வெளிவிவகார ஆலோசகராக இருந்த அட்மிரல் ஜயநாத் கொழம்பகே ஆவார்.

தன்னை சிக்கலில் ஆழ்த்த நடவடிக்கை எடுத்தவர் இவரெனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரதான பதவி வகித்தவர்களின் செயற்பாடுகள்

இந்தக் குற்றச்சாட்டில், கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்திலும் அதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் காலத்திலும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஜெனரல் கமல் குணரத்ன CIA-க்கு ஆதரவாக செயல்பட்ட நபராக பெயருடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், கோட்டாபய ராஜபக்ச தெரிந்தே CIA-வுடன் தொடர்புடைய நபரை பாதுகாப்புச் செயலாளராக வைத்திருந்தார் மற்றும் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க நடவடிக்கை எடுத்தார் என்ற குறிப்பு வெளிப்படுகிறது.

கோட்டாபயவுக்கு குழிபறித்த அவரின் சகாக்கள் : திடுக்கிடும் தகவல்கள் அம்பலம் | Gotabaya Rajapaksa Cia Central Intelligence Agency

அசங்க அபேகுணசேகர வெளியிட்டுள்ள தகவலின்படி, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் முழு பாதுகாப்பு வளையமும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான Central Intelligence Agency (CIA) கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதை அவருக்கே நேரடியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

         

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US