புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....
என்பிபி அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் தெளிவான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இன்று அந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்தி செல்கின்றனர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வுத் துறைப் பிரதானி துவான் சுரேஷ் சலே என்ன செய்தார் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசை வீழ்த்தும் செயற்பாடுகள்
அரசை வீழ்த்தும் செயற்பாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஒன்று முதன் முறையாக செயற்படுகிறது. அரசின் தூண்களாக கருதப்படுபவை ஒவ்வொன்றாக செயலிழக்க செய்யப்படுகிறது.
பௌத்த பிக்குகளுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துகின்றனர். அத்தோடு தேசிய பாதுகாப்பு வலுவிழக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.

அது தான் தேசிய பாதுகாப்புக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும். முப்படையில் முக்கிய கடமையாற்றிய புலனாய்வு பிரிவு தலைவர்கள் மற்றும் கடற்படை தளபதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் புலம் பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவா என குறிப்பிட்டுள்ளார்.