தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வீட்டில் கட்டப்பட்டிருக்கும் பதாகை! சர்ச்சையை கிளப்பும் விமல்...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த வீட்டை மூன்று தட்டு கொண்ட கட்டடமாக நிர்மாணித்து கலாசார மத்திய நிலையம் மற்றும் நுலகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
அந்த வீட்டின் முன்னால் கட்டப்பட்டுள்ள பதாகையில் கௌரவத்திற்குரிய தமிழீழத்தின் ஜனாதிபதி என குறிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுடன் என்பிபி அரசு தெளிவான ஒரு உடன்பாட்டை கொண்டுள்ளது! விமல் வீரவன்சவின் பகிரங்கம்....
வலுவிழக்கச் செய்யப்படும் பாதுகாப்பு படையினர்
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ புலனாய்வுத் துறைப் பிரதானி துவான் சுரேஷ் சலே என்ன செய்தார் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
இதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது யுத்தத்தில் அவயவங்களை இழந்த இராணுவத்தினருக்கு. இராணுவ மற்றும் போர் கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ முகாம்களை அகற்றி வருகின்றனர்.

இன்று நாட்டில் பாதுகாப்பு படையை விட்டுச் செல்லுவோர் அதிகரித்துள்ளது. நாட்டில் தலைவரே பாதுகாப்பு படையின் வலிமையை குறைத்து மதிப்பிடுவதாலே பாதுகாப்பு படையை விட்டு செல்வோர் அதிகரித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இராணுவத்தை வலுவிழக்கச் செய்வதற்காகவே தொடராக பாதுகாப்பு படையினர் கைது செய்யப்படுகின்றனர்.
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri