இலங்கையில் 350 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு
மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 350 ரூபாவைத் தாண்டும் என்று பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
350 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்தியக் கிழக்கு போர்ச் சூழல் நீடிக்குமாயின் டொலரின் பெறுமதி உயர்வதோடு, நாட்டின் பணவீக்கம் அதிகரித்து மக்கள் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரி்டும்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள பொருளாதாரத் தரவுகள் குறித்து மக்கள் மத்தியில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது.

1988-93 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இவ்வாறான சர்வதேச நெருக்கடிகளை வெற்றிகரமாக கையாண்டு பொருளாதார வளர்ச்சியைப் பேணினார்.
இந்த நிலையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தாது கவனத்திற் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri