ஈரானின் அறிவீனமான முடிவு - இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை

Donald Trump Qatar Iran Iran President
By Shadhu Shanker Mar 19, 2026 10:12 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் கத்தார் போன்ற மிகவும் அப்பாவி நாட்டைத் தாக்க அறிவீனமாக முடிவு செய்தால் தவிர, இஸ்ரேல் South Pars gas field மீது மீண்டும் தாக்குதல் நடத்தாது என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து, ஈரான் தனது பாரசீக வளைகுடா அண்டை நாடுகளின் ஆற்றல் வசதிகளின் மீது தாக்குதல்களை அதிகரித்ததன் பின்னர் வெளியாகியுள்ளது.

அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு

அடுத்த சில மணிநேரங்களில் - மிகப்பெரிய தாக்குதல்! குறிவைக்கப்பட்டுள்ள 5 முக்கிய எரிசக்தி நிலையங்கள் - IRGC அதிரடி உத்தரவு

ட்ரம்ப் எச்சரிக்கை

குறிப்பாக, உலகின் மிகப்பெரிய LNG வசதிகள் அமைந்துள்ள Qatar-ஐ ஈரான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்பு, இஸ்ரேல், ஈரானின் South Pars இயற்கை எரிவாயு தளத்தை தாக்கியிருந்தது.

இஸ்ரேல் “கோபத்தின் காரணமாக” தாக்குதல் நடத்தியது என்றும், அந்த நடவடிக்கையைப் பற்றி அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தகவல் இல்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அவர் தனது Truth Social தளத்தில், இஸ்ரேல் South Pars களத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் கட்டாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஈரான் இந்த உண்மைகளை அறியாமல், கட்டாரின் LNG வாயு நிலையத்தின் ஒரு பகுதியை “நியாயமற்ற முறையில்” தாக்கியதாகவும் அவர் கூறினார்.

ட்ரம்ப் மேலும் எச்சரித்ததாவது, ஈரான் மீண்டும் கட்டாரை தாக்கினால், அமெரிக்கா — இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் — South Pars முழு களத்தையும் இதுவரை காணாத அளவிலான வலிமையுடன் அழிக்கும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆனால், இந்த அளவிலான வன்முறையைத் தாம் விரும்பவில்லை என்றும், அதன் நீண்டகால விளைவுகள் குறித்து கவலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரமதர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் உள்ளாரா - இல்லையா! களத்திலிருந்து நேரடி அறிக்கை

இஸ்ரேல் பிரமதர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் உள்ளாரா - இல்லையா! களத்திலிருந்து நேரடி அறிக்கை

எண்ணெய் விலை

கட்டாரின் அரசுக்கு சொந்தமான Qatar Energy நிறுவனம் தெரிவித்ததாவது, ஈரானின் ஏவுகணை தாக்குதலால் LNG உற்பத்தி நிலையங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு குழுக்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன என்றும், இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் உலகின் முக்கிய இயற்கை எரிவாயு விநியோக நாடுகளில் ஒன்றாகும்.

ஈரானின் அறிவீனமான முடிவு - இஸ்ரேலின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை | No More Israeli Attacks Unless Trump

இந்த போர் காரணமாக ஏற்கனவே உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், ஏற்பட்ட சேதம் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். போர் அதிகரித்த நிலையில், இஸ்ரேல் ஈரானின் South Pars இயற்கை எரிவாயு தளத்தை தாக்கியது.

இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, ஈரான் கட்டார் உள்ளிட்ட பாரசீக வளைகுடா நாடுகளின் ஆற்றல் வசதிகளை குறிவைத்து தாக்கியது. இதையடுத்து, கட்டார் அரசு ஈரான் தூதரக அதிகாரிகளை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

ஈரான், United Arab Emirates நாட்டில் உள்ள Habshan மற்றும் Bab வாயு தளங்களையும் தாக்கியுள்ளது.

இதனை UAE அரசு “அபாயகரமான பதற்ற உயர்வு” எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் காரணமாக, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 5% உயர்ந்து, ஒரு பீப்பாய் $108-ஐ கடந்துள்ளது.

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தில் வான்வழித் தாக்குதல்

ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களத்தில் வான்வழித் தாக்குதல்

YOU MAY LIKE THIS VIDEO


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US