QR இன்றி எரிபொருள் வழங்க 3000 ரூபா..! சபையில் அம்பலமான தகவல்
QR குறியீடின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள பணம் பெறப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், QR குறியீடு இன்றி எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வாகன உரிமையாளர் ஒருவரிடம் 3000 ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.டி.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து அவர் இன்றைய தினம் (19.03.2026) நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
முறைகேடுகள் இடம்பெறும் வாய்ப்பு
இதற்குப் பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

எனினும், QR குறியீடு தொடர்பான அனைத்து தொழிநுட்பப் பிரச்சினைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருவதால், இன்றைய தினத்திலிருந்து இவ்வாறான மோசடிகளுக்கு இடமிருக்காது என அவர் உறுதியளித்தார்.
மேலும் QR முறைமை முழுமையாகச் சீரடைந்தவுடன், இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri