ரணிலின் வழக்கு விசாரணையில் நடந்தது என்ன! வழக்கில் புதிய திருப்பம்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டமையானது இலங்கை அரசியலில் மட்டுமன்றி சர்வதேச அரசியலிலும் பேசுபொருளாகியிருந்தது.
பின்னர் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், ஓகஸ்ட் 26ஆம் திகதி கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம்(29)ஆம் திகதி அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சொலிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலை சென்றார் முதல் அவர் வாசித்த புத்தகம், எடுத்துக்கொண்ட புகைப்படம் வரை சந்தேகம் வெளியிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிதீவிர சிகிச்சைபிரிவிலிருந்தே நேரடியாகவே வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தவிடயங்களை முழுமையாக ஆராய்கின்றது லங்காசிறியின் Top Stories நிகழ்ச்சி..