ட்ரம்பின் அதிரடி உத்தரவால் உலக அரங்கில் பதற்றம்
அமெரிக்காவில் அணு ஆயுத சோதனையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அணு சக்தியில் இயங்கும் ஏவுகணை சோதனையை ரஷ்யா சமீபத்தில் மேற்கொண்டது.
ட்ரம்பின் உத்தரவு
இதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அணுசக்தியால் நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை சோதித்து வருவதால், தங்கள் அணு ஆயுதங்களை சோதிக்க ஆரம்பிக்குமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தன் அணு ஆயுத பலத்தை விரைவாக அதிகரித்து வருவதாக தெரிவித்த ட்ரம்ப், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு இணையாக வளர்ந்துவிடும் என எச்சரித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கை உலக அரங்கில் மிகுந்த கவலையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த முடிவு, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா இடையே அணு ஆயுதப் போட்டியை தூண்டி விடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 1992ம் ஆண்டு முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        