நிலைமை மோசமாகியுள்ளது..! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்க குடிமக்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈராக்கை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை
இது தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக இப்போதே ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரகம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

"ஈரான் ஆதரவு பயங்கரவாத போராளிக் குழுக்களால் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இதனால் ஈராக்கில் தங்கும் அமெரிக்கர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து
மத்திய கிழக்கு முழுவதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ மையங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்த மோதல் பிராந்திய போராக வெடிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

இதனால் நிலைமை மோசமாகியுள்ள சூழலில், அமெரிக்கா இதுவரை 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தனது குடிமக்களை வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா சனிக்கிழமையன்று ஓமானில் உள்ள அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.