இலங்கையில் மற்றுமொரு QR குறியீடு முறை - வெளியான அறிவிப்பு
இலங்கையின் சுற்றுலாத்துறையில் சேவைகளை வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விசேட QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் படி அனைத்து சுற்றுலா சேவை வழங்குநர்களும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இதன்மூலம் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டவர்களைச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக அடையாளம் காண இந்த QR குறியீடு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்பட்டு, தரமான சேவை உறுதி செய்யப்படும்.
சமீபத்திய மாதங்களில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரமழான் காலப்பகுதியில் மத்திய கிழக்கிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25% முதல் 35% வரை குறைந்துள்ளதாகவும் குறிப்பட்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri