உலகின் முதல் AI போர் விமானம் அமெரிக்காவில்
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.
X-BAT எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது.
AI போர் விமானம்
இந்த விமானத்தை இயக்க ஓடு பாதை கூட தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.
இந்த நவீன போர் விமானம், F-16 வகை இயந்திரத்தைப் பயன்படுத்தி 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) தூரம் வரை, அதிகபட்சமாக 50,000 அடி (சுமார் 15,240 மீட்டர்) உயரத்தில் பறக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

X-Bat வானூர்தியில் உள் ஆயுதக் கூடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் வானை நோக்கியும் தரையை நோக்கியும் தாக்குதல் ஆயுதங்கள் பொருத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, பெரிய அளவிலான தாக்கு குண்டுகளை வெளிப்புறங்களில் பொருத்தும் வசதியும் உள்ளது. அதேவேளை உலகின் முதல் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் VTOL போர் விமானம் என Shield AI நிறுவனம், அறிவித்துள்ளது.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri