ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
மத்திய கிழக்கில் போர் காரணமாக அதிகரித்து வரும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்றும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மேற்கொண்ட கடற்படை தடையால் பாரசீக வளைகுடா பகுதியில் எண்ணெய் டாங்கர்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தொடர்ந்தால், கார்க் தீவில் உள்ள ஈரானின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையத்தை கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்க ட்ரம்ப் முடிவு செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் பதிலடி தாக்குதல்
அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டால், அமெரிக்க படைகள் நேரடியாக ஈரான் நிலப்பரப்பில் இறங்க வேண்டிய நிலை உருவாகும்.
இது சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வசதிகள் மற்றும் குழாய்களை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தும் அபாயத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய நண்பனான இஸ்ரேல் தற்போது ஈரானை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு தயாராக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் Reuven Azar கூறுகையில், அமெரிக்கா மற்றும்இஸ்ரேல் இரண்டும் ஈரானை ஆக்கிரமிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகம்
இராணுவ ஆக்கிரமிப்பை விட, ஈரானின் மக்களிடமிருந்து வரும் அழுத்தத்தின் மூலம் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே தற்போதைய நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.
ஈரான் மேற்கொண்ட கடற்படை தடையால் Strait of Hormuz வழியாக நடைபெறும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலகளாவிய எண்ணெய் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த தடையினால் வளைகுடா பகுதிகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டிருக்கும் வரை, போரை முடிவுக்கு கொண்டுவருவது அமெரிக்காவுக்கு கடினம் என ஒரு தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க பல நாடுகளை இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த கூட்டணியை இந்த வாரம் அறிவிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரானின் மகுட ரத்தினம்
இதற்கிடையில் அமெரிக்கா , ஈரான் தொடர்புடைய பல இலக்குகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. குறிப்பாக பாரசீக வளைகுடா கடற்கரை பகுதிகளிலும் Kharg Island பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை கார்க் தீவில் உள்ள இராணுவ தளங்களை தாக்க உத்தரவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால் அங்கு உள்ள எண்ணெய் வசதிகளை அவர் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் NBC ஊடகத்திடம் பேசிய ட்ரம்ப், “தேவையானால் இன்னும் சில முறை தாக்கலாம்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்க் தீவை “ஈரானின் மகுட ரத்தினம்” என்று குறிப்பிட்ட அவர், அந்த தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளும் முழுமையாக அழிக்கப்பட்டதாகவும் கூறினார்.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது, கார்க் தீவை கைப்பற்றுவது “ஈரான் ஆட்சிக்கு கடுமையான பொருளாதார அதிர்ச்சி” ஏற்படுத்தும் என்றும், இதன் மூலம் தெஹ்ரானின் வருவாய் ஆதாரத்தை முடக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டரான Lindsey Graham, கார்க் தீவைக் குறிவைத்து ட்ரம்ப் எடுத்த முடிவை பாராட்டியுள்ளார்.
அவர் சமூக ஊடகமான X-ல் வெளியிட்ட பதிவில், “போரில் ஒரு எதிரி தன்னுடைய பலவீனத்தை இவ்வளவு தெளிவாக காட்டுவது அரிது. கார்க் தீவை கட்டுப்படுத்துபவரே இந்த போரின் முடிவை தீர்மானிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
கார்க் தீவு முக்கிய தளம்
ஈரான் கரையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள Kharg Island, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியின் சுமார் 90% நடைபெறும் முக்கிய மையமாகும் என JPMorgan Chase வெளியிட்ட ஆய்வு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960 மற்றும் 1970களில் ஈரானின் எண்ணெய் தொழில் விரிவடைந்த காலத்தில் இந்த தீவு முக்கிய வளர்ச்சியை கண்டது. ஈரான் கடற்கரையின் பெரும்பகுதி ஆழமில்லாததால் பெரிய எண்ணெய் கப்பல்கள் தங்குவதற்கு கார்க் தீவு முக்கிய தளமாக மாறியது.
பின்னர் 2021ஆம் ஆண்டு Jask பகுதியில் புதிய எண்ணெய் ஏற்றுமதி மையத்தை திறந்து, ஹோர்முஸ் நீரிணை மீது உள்ள சார்பை குறைக்க ஈரான் முயன்றது. இருப்பினும், கார்க் தீவு இன்னும் ஈரானின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவே உள்ளது.
மேலும் இந்த தீவு, Islamic Revolutionary Guard Corps (IRGC) எனப்படும் ஈரானின் சக்திவாய்ந்த படைப்பிரிவுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாகவும் விளங்குகிறது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri