தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சர்ச்சை: நெடுங்கால உறுப்பினர் கவலை

Sri Lankan Tamils S. Sritharan Sri Lanka Politician
By Kajinthan Jun 03, 2026 01:31 PM GMT
Report

தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் தற்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டும் என கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது என தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர். குலநாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாவட்டக் கிளைக் கூட்டம் தொடர்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

யோஷித ராஜபக்ச வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தலைவராக அமர்ந்த சிவஞானம்

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தலைவர் தெரிவில் இடம்பெற்ற அடாவடித்தன செயற்பாடு இலங்கைத்தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளைக் கூட்டம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கடந்த 31.05.2026 பிற்பகல் 4.15 மணியளவில் கட்சி தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த கூட்டத்திற்கான கடிதத்தினை மாவட்ட கிளைச் செயலாளர் என்ற வகையில் நான் அனுப்பியிருந்தேன். மாவட்ட கிளைத் தலைவரான திரு. பெ. கனகசபாபதி கூட்டத்திற்கு தான் வரமுடியாது உள்ளதாகவும், என்னைத் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுமிருந்தார். கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் வயதையும் கருத்திற்கொண்டு மரியாதையின் நிமித்தமும் சிவஞானம் தலைமை தாங்கி நடத்துமாறும் கேட்டுக்கொண்டேன். தலைமை தாங்க சம்மதித்த அவர் கூட்டம் ஆரம்பமானதும் எழுந்து நின்று கூட்டத்தினை சுமந்திரன் நடத்துவார் என அறிவித்தார்.

தமிழரசுக் கட்சியில் 77 வருடம் இல்லாத சர்ச்சை: நெடுங்கால உறுப்பினர் கவலை | Controversy Within The Tamil Nadu Government

எனக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும் கட்சி நலன் கருதி சமாளித்துக்கொண்டேன். தான் தலைமை தாங்காதுவிடின் என்னிடம் தான் கூறியிருக்க வேண்டும். நானே கூட்டத்தினை நடத்தி முடித்து இருப்பேன். பின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சுமந்திரன் அறிவித்து செயலாளர் தெரிவு இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து உடனேயே தசிவஞானத்தினை தானே பிரேரித்து அந்த இடத்திலிருந்து தான் தலைமை தாங்குவதால் மாற்றுப் பிரேரணைக்கு இடமில்லை என்றும் எவரும் ஆமோதிக்க கூட தேவையில்லை என தெரிவித்த போது சபையிலிருந்தவர்கள் அதனை ஆட்சேபித்தார்கள்.

நான் கடுமையாக எதிர்த்து மற்றவர்களின் கருத்துக்கும் இடமிருக்க வேண்டும் என வற்புறுத்தினேன். இது தொடர்பான கருத்துக்கள் தெரிவித்தவர்களை அடாத்தாக அமரச் செய்து அவர்களது கருத்துக்களை மறுத்து சிவஞானமே தலைவர் என அறிவித்தார். இதனை ஏற்காத நான் கட்சி நலன் கருதி அமைதியாக இருந்து விட்டேன்.

மற்றவர்களின் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்காமலே சிவஞானம் தலைமை தாங்க அமர்த்தினார். இந்த செயற்பாடு ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இலங்கைத்தமிழரசுக் கட்சியில் மட்டுமல்ல வேறெந்த அமைப்புகளிலும் கூட இம்மாதிரியான அடாவடிச் செயற்பாடுகள் இடம்பெற்றது இல்லை.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கென்று ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும் உள்ளன. கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது.

கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்களும் குடிகொண்டு சன்னதமாடுகின்ற நிலை போன்று, கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது.

கட்சிக்குள் நடக்கும் போட்டித்தன்மை

எனவே இம்மாதிரியான தெரிவுகள் குறித்து கட்சி தீவிர கவனம் செலுத்தி தகுந்த தீர்வைக் காணாது விட்டால் சுயநலத்தாலும் பதவி மோகம் என்பதற்கு அப்பால் பதவி வெறியாலும், காழ்புணர்வுகளாலும் அடாவடித்தனங்கள் சண்டித்தனங்களாலும் பிரதேச வாதங்களாலும் நொருக்குண்டு பலயீனம் அடைந்திருக்கும் எம் கட்சியின் இன்றைய நிலை மேலும் மோசம் அடையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள தாமதம்..! பெருந்தொகை பணத்தை இழந்த திணைக்களம்

அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள தாமதம்..! பெருந்தொகை பணத்தை இழந்த திணைக்களம்

கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன். வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலக்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இந்த கடிதத்தினை எழுதுகிறேன். இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். எதிர்காலத்தில் இப்படியான நடைமுறைகளை வரும் சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது.

இவ்விடயம் முன்னுதாரணமாக கொள்ளப்பட்டு கட்சி சின்னாபின்னமாக்க இடமளிக்கக் கூடாது என்பதற்காக இந்த கடிதத்தினை எழுதுகிறேன்.

இந்த கடிதத்தை ஏற்று மாவட்ட தலைவர் தெரிவு பற்றிய மத்திய செயற்குழு ஏற்று நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கிறேன். மேற்படி செயற்பாடு குறித்து எனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

GalleryGallery
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US