வெனிசுலா போர்ச் செலவை விட 28 மடங்கு இலாபம் ஈட்டியுள்ளோம் : ட்ரம்ப் அதிரடி அறிக்கை
வெனிசுலா நாட்டில் அமெரிக்கா நடத்திய இராணுவ நடவடிக்கை "சரியாக 48 நிமிடங்கள்" மட்டுமே நீடித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட செலவினங்களை விட, அங்குள்ள எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்ததன் மூலம் 28 மடங்கு கூடுதல் தொகையை அமெரிக்கா மீட்டெடுத்துள்ளதாக அவர் அதிரடியாகக் உரிமை கோரியுள்ளார்.
ட்ரம்பின் புதிய அறிவிப்பு
சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த இராணுவ நடவடிக்கை மற்றும் அதன் மூலம் ஈட்டப்பட்ட இலாபம் குறித்த முழுமையான விவரங்கள், ட்ரம்பின் இந்த புதிய அறிவிப்பின் மூலம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

போருக்கான செலவுகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக வருவாயை எண்ணெய் வளம் மூலம் அமெரிக்கா ஈட்டியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் தற்போதைய முக்கியச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.