நாட்டுக்கு வாருங்கள் என்ற அநுர அமைச்சர்! நம்பி வந்த ஈழத்தமிழர் விமான நிலையத்தில் மாயம் - வெடித்தது சர்ச்சை
இந்தியாவில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரும், திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்டகால சட்டப் போராட்டத்தின் பின்னர் நேற்றையதினம் ஒக்டோபர் 26ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5.45 மணியளவில் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TID) அவர் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
கிருஷ்ணகுமாருக்கு எதிரான தடுப்பாணையை மீள்பரிசீலனை செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம் என சமூக ஆர்வலர் ரஜீவ் காந்த் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வெளிநாடுகளில் இந்தியாவில் அகதிகளாக தடுப்பு முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு இலங்கை அரசு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த விவகாரம் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி.....
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri