கொழும்பில் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்ட செல்லப் பிராணி.. சந்தேக நபர்கள் கைது
நீர்கொழும்பில் உள்ள செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்தில் டேங்கோ (Tango) என்ற நாய் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மையத்தின் உரிமையாளரும், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பராமரிப்பு மையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகர சபை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும், பிராணி வன்கொடுமைக்கு எதிராக சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் விலங்கு நலக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
