அர்னாப் புயல்: இலங்கையில் வானிலை தாக்கம் நாளை குறையும் - வளிமண்டலவியல் திணைக்களம்
வங்கக்கடலில், மத்திய - மேற்கு பிறதேசத்தில் உருவெடுத்துள்ள தீவிரப் புயலான 'அர்னாப்' இந்தியக் கடற்கரையை நோக்கி நகர்வதால், இலங்கையில் அதன் நேரடி வானிலை தாக்கம் நாளை (28.10.2026) முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11:30 மணி நிலவரப்படி, காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 820 கி.மீ தொலைவில் (வடக்கு அட்சரேகை 16.0°, கிழக்கு தீர்க்கரேகை 84.3°) மையம் கொண்டிருந்தது இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28) முற்பகல் 11:30 மணியளவில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரை ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மழை பெய்யும் சாத்தியம்
இதன்போது, நாளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1:00 மணிக்கு மேல் மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri