செம்மணி விசாரணையில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை : அநுர தரப்பு பகிரங்கம்
செம்மணி விசாரணையில் எந்தவித தலையீடோ அல்லது எந்த விதமான செல்வாக்கையுமோ நாங்கள் செலுத்தாமல் அது நேர்மையான முறையில் நடைபெறுகிறது என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(26.10.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும்
மேலும் தெரிவிக்கையில், செம்மணி விவகாரத்தை பொறுத்தவரையிலே கடந்த எந்த அரசும் செய்யாத வேலைகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
எனவே, பலர் பல கருத்துக்களை சொன்னாலும், நாங்கள் எந்த விசாரணையில் எந்தவித தலையீடும் அல்லது எந்த விதமான செல்வாக்கும் நாங்கள் செலுத்தாமல் நேர்மையான முறையில் அது நடைபெறுகிறது.

செம்மணி மாத்திரமல்ல, எல்லா விசாரணைகளையும் நேர்மையான முறையிலே செயற்படுத்துவதற்கு நாங்கள் பூரண சுதந்திரத்தை வழங்கி இருக்கிறோம்.
நான் நினைக்கிறேன். செம்மணி விவகாரத்தில் சிலவற்றுக்கு உள்நாட்டு பொறிமுறைகள் போதுமானதாக இருக்கிறது. நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.
எனவே, மக்கள் தற்பொழுது இந்த அரசாங்கத்தின் மீது, நீதிமன்றத்தின் மீது முதல்முறையாக இந்த நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நாளுக்கு நாள் சில நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. எனவே, இந்த நம்பிக்கையின் அடிப்படையில் எல்லா அநீதிகளுக்கும் நீதி நிச்சயமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதத்தை வைத்து ஆட்சியை தக்கவைக்க
மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் மதத்தை வைத்து அரசியல் செய்யாது. மதத்தை வைத்து நாங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள மாட்டோம்.

தேரர்களுடைய போராட்டம் மற்றும் கொழும்பிலே கூடாரமிட்டு தங்கியிருப்பது எல்லாமே ஒரு அரசியல் நாடகம் என்பது இன்று சிறிய குழந்தைக்கு கூட தெரிந்த விடயமாக இருக்கிறது.
இந்த நாட்டிலே கடந்த காலத்திலே ஊழல் செய்து தவறிழைத்தவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை சரியாக செய்கின்ற பொழுது, இந்த அரசியல்வாதிகள் மிகவும் கவலை அடைந்து, பயம் கொண்டு, கூக்குரலிடுகின்றனர்.
அதனுடைய விளைவாக இந்த அரசாங்கத்தினுடைய அதிகாரத்தை குழைப்பதற்கு அல்லது ஆட்சியை மாற்றுவதற்கு அவர்கள் இறுதியாக எடுத்த ஒரே ஆயுதம் இந்த மதம். எனவே, இதுவும் இன்று தோல்வி அடைந்த நிலையிலே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகத்தில் எத்தனையோ நாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் செல்கிறார்கள். எனவே எந்த நாடும் இதுவரைக்கும் அதை ஒரு புனித யாத்திரையாக அறிவிக்கவில்லை.
உலகத்தில் முதல்முறையாக இந்த ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக ஏற்றுக்கொண்டு அறிவித்த ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை பெறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri