2009இல் சரணடைந்தவர்கள் சுரேஷ் சலேவின் வதைமுகாமில் - ஹேக்கிங்கில் கசிந்த இரகசியம்
சுரேஷ் சலேவின் விவகாரம் குறித்து நாளுக்கு நாள் பல இரகசியத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது, தனது மடிக்கணினிகள் மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ உடைமைகளையும் இராணுவத் தளபதியிடம் முறையாக ஒப்படைத்துள்ளார் என்றும் அவரது சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம குறிப்பிட்டிருந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து விலகியபோது தனது சீருடை, குறிப்பேடுகள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள், வாகனங்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டார் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது சிஜடி தரப்பு கேட்கும் மடிக்கணினி எது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இதேவேளை சுரேஷ் சலே கணினி தொழில்நுட்பத்தில் மிகத்தேர்ந்தவர் எனவும் ஹேக்கிங் செய்வதை நன்கு பயின்றவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
கட்டுநாயக்க விமானத்தில் காத்திருந்த வெளிநாட்டு யுவதி - பைக்குள் இருந்த பெறுமதியான பொருள்: அதிரடி கைது