அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இனிவரும் நாட்களில் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும உதவித்தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும உதவித்தொகைத்திட்டம் 2023 இல் தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, தற்போது அதிகாரிகளால் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
அஸ்வெசும உதவித்தொகைக்கு தகுதி
இதன்படி, 2023 ஆம் ஆண்டு நான்கு பிரிவுகளின் கீழ் கிட்டத்தட்ட 16 இலட்சம் மக்கள் அஸ்வெசும உதவித்தொகையை பெற்றுள்ளனர்.

மேலும், ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு நான்காவது பிரிவான இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 3,15,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.
மூன்றாவது பிரிவான நலிவடைந்த மக்களில் சேர்ந்த 4,25,000 பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அஸ்வெசுமா உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளில் ஏழையாகவோ அல்லது கடும் வறுமையில் உள்ள குடும்பங்களோ இருந்தால், அவர்கள் மறு குடியமர்வு உதவித்தொகையைப் பெற முடியும் என்று நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.