சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்கள் ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
சிறைக் கலவரங்கள்
எனினும், தற்போது அவர்களுடைய அரசாங்கத்தில் பல துரதிஷ்ட சம்பவங்கள் நிகழும் போது அதனை தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசாங்கம் பழி சுமத்தி வருகின்றது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. 11 ஆயிரம் பேரைத் தடுத்து வைக்க வேண்டிய சிறைச்சாலையில் 45ஆயிரம் பேரைத் தடுத்து வைத்திருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இப்போது வரை சிறைச்சாலைகளில் உள்ள மலசல கூடங்களையாவது சீரமைத்திருக்கின்றதா.

ஆனால், பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் மீதும் பழி சுமத்தி வருவதுடன், எதிர்க்கட்சிகளை நோக்கி விரல் நீட்டுவதும், ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுமே இவர்களுடைய வேலையாக இருக்கின்றது.
தற்போது சிறையில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாமல் ராஜபக்சதான் காரணமாக இருக்கும் என மக்களுக்கு இந்த அரசாங்கம் அறிவிக்கும்.
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்சதான் உள்ளார் என இந்த அரசாங்கம் நம்பிக் கொண்டிருக்கும். இதனைத் தான் ஜனாதிபதி அநுரவும் மக்களுக்கு அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan