வரி திருத்தம் மற்றும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
2027 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் ஊதியம் பெறுவோருக்காக அறவிடப்பட்ட வரியை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான அடுத்த திட்டம்
மேலும், அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தின் அடுத்த கட்டம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 2027 வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை நூறு சதவீதம் அதிகரிகப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தியாவசிய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சில கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
2028 ஆம் ஆண்டில் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான எவ்வித தேவைப்பாடுகளும் இல்லை என்பதால், கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan