தன்னிச்சையான சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது..! அநுர உறுதி
பயங்கரவாதத்திலிருந்து தேசத்தைப் பாதுகாக்கும் உத்தேச சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் என்பனவற்றை அரசாங்கம் முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது என இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
இன்று(07.11.2026) தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை அதிகாரமாக பயன்படுத்த தேவை இல்லை..
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்மொழியப்பட்ட சட்டம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் அரசாங்கம் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.
அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காகச் சட்டத்தைப் பயன்படுத்தும் நோக்கம் தமது நிர்வாகத்திற்கு இல்லை. சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்கும் அரசாங்கம் தம்முடையது அல்ல.

மாறாக, மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தேர்தல் மூலம் தமது அரசாங்கத்தைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு வாக்காளர்கள் தீர்மானித்தால், பதவியை விட்டு விலகத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
அத்துடன், இந்த சட்டம் அடிப்படை உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உத்தேச சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கொழும்பில் நேற்று (06) போராட்டம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.