பிறந்த நாளில் நடந்த துயரம் - கோர விபத்தில் பலியான வைத்தியர்
அநுராதபுரம், ஹபரண தேவாலயத்திற்கு அருகில் இன்று சம்பவித்த கோர விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் இன்று நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காரைச் செலுத்திச் சென்ற பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் திறமையான வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மாத்தளை வைத்தியசாலையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியர் பலி
அவர் தனது மோட்டார் காரை பொலநறுவையில் இருந்து மாத்தளை நோக்கி அவரே செலுத்திச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சமீப காலம் வரை மாத்தளை வைத்தியசாலையில் பணியாற்றி, பின்னர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அவர், நோயாளர்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோற்றத்தில் சற்று கண்டிப்பானவராகத் தெரிந்தாலும், அறுவை சிகிச்சைத் துறையில் அதிதிறமை வாய்ந்தவராகவும், மனிதநேயமிக்க ஒரு சிறந்த மருத்துவராகவும் திகழ்ந்துள்ளார் என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல்