இலங்கையை உலுக்கிய இளம் பெண் படுகொலை! பிரதான சந்தேகநபர் திடுக்கிடும் வாக்குமூலம் - வெளியான காரணம்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Crime
By Dhayani Jun 25, 2026 02:39 AM GMT
Report

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அம்பாறை பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன.   

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.   

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - நள்ளிரவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - நள்ளிரவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்

பெண் வைத்தியரின் கொலை 

இந்நிலையில் பெண் வைத்தியரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த காதலன் என அறியப்பட்ட பிரதான சந்தேகநபர் கடந்த ஒரு வார காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேற்றிரவு (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.  

இலங்கையை உலுக்கிய இளம் பெண் படுகொலை! பிரதான சந்தேகநபர் திடுக்கிடும் வாக்குமூலம் - வெளியான காரணம் | Delteniya Doctar Murtet Investigation Police

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது வாக்குமூலத்தில்,

பிரதான சந்தேகநபர் 30 வயதுக்கு மேற்பட்ட, திருமணமாகாத பெண்களை இலக்கு வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றும் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த பிசியோதெரபிஸ்டை அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்றபோதுதான் அவர் சந்தித்துள்ளார். சந்தேகநபர் பெண்களை ஏமாற்றிப் பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

பெண்களை ஏமாற்றி பணம் கொள்ளை

இவர் பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் பெண்களை ஏமாற்றிப் பெற்ற மொத்தப் பணம் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பணத்தில் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளதுடன், அங்கு பணியாற்றிய இளம் பெண்ணிடமும் 10 இலட்சம் ரூபாவை அபகரிக்கத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய இளம் பெண் படுகொலை! பிரதான சந்தேகநபர் திடுக்கிடும் வாக்குமூலம் - வெளியான காரணம் | Delteniya Doctar Murtet Investigation Police 

இவ்வாறு ஏமாற்றப்படும் பெண்களுக்கு, தான் அந்த நபரின் "மூத்த சகோதரி" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த மோசடிகளுக்கு உதவி செய்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.   

சந்தேகநபர் அடிக்கடி பயன்படுத்தும் போலி தலைமுடியும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.   

இந்நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்த 34 வயதுடைய ஷாம்யா தர்ஷனி  என்பவரை 3ஆம் திகதி நுவரெலியாவிற்கு அழைத்து வந்து அங்குள்ள அறையில் விட்டதாகவும், தொலைபேசிக்கு பலமுறை அழைத்தும் எந்த பதிலும் வராததால் 16ஆம் திகதி மீண்டும் அங்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

வாக்குமூலத்தில் வெளியான தகவல் 

அறைக்குச் சென்றபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்ததாகவும், இதனால் அச்சமடைந்து சடலத்தை காரில் ஏற்றி தெல்தெனியவுக்கு கொண்டு சென்றதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இலங்கையை உலுக்கிய இளம் பெண் படுகொலை! பிரதான சந்தேகநபர் திடுக்கிடும் வாக்குமூலம் - வெளியான காரணம் | Delteniya Doctar Murtet Investigation Police

இளம் பெண்ணின் உடலை சாரதி இருக்கைக்கு அருகில் வைத்து விட்டு தனது மனைவியும் மூன்று குழந்தைகளும் பின் இருக்கையில் இருந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

இதன்பின்னர் தனது மனைவியையும் குழந்தைகளையும் நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு, அந்த பெண்ணின் உடலை தெல்தெனியாவிற்கு எடுத்துச் சென்று வைத்தியசாலை வாகன நிறுத்துமிடத்தில் விட்டுச்சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரதான சந்தேகநபரும், அவரது மனைவியும் மேலதிக விசாரணைக்காக தற்போது நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இவர்களுக்கு உதவிய நண்பரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறுதி போரை தலைகீழாக மாற்றியிருக்கும் ஒரு சந்தர்ப்பம்:ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெளிப்படுத்திய இரகசியம்...

இறுதி போரை தலைகீழாக மாற்றியிருக்கும் ஒரு சந்தர்ப்பம்:ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வெளிப்படுத்திய இரகசியம்...

திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - வெளியான தகவல்

திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரசாங்க ஆதரவாளர் - வெளியான தகவல்




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US