மக்களை காப்பாற்றவே கோட்டபாய தப்பி ஓடினார்! மகிந்தவிற்கு பதவி கொடுத்த மைத்திரி
அரகலய போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் ஒருபடி பின்வாங்கியது. உயிர்களை பலி கொடுத்தோ அல்லது பிள்ளைகளை கொன்றோ அரசாங்கத்தை பாதுகாக்க நாங்கள் நினைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் காலப்பகுதியில் நாங்கள் அமைதியாக செயற்பட்டமையே எங்களுடைய பலவீனம் என்று நான் நினைக்கின்றேன் எனவும் அவர் ஊடக சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டிருந்தார்.
இவருடைய இந்தப் பதிவிற்கு எதிராக மக்கள் பதிலளிக்கையில், தற்பொழுது நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை கலவரங்கள் கூட ராஜபக்சர்களின் சதித் திட்டமே.
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சேர்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுதான் எல்லா மேற்கத்தேய நாடுகளினதும் நடைமுறை ஆகும்.
ராஜபக்ச குடும்பத்தினர் இல்லாமல் இலங்கையில் எந்தத் தீங்கும் நடப்பதில்லை. ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்புடையவர்களும் அவர்களே என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த பதவி தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,