இலங்கையில் இருந்து 24.8 பில்லியன் ரூபாவை வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்த நபர்
டெலிகிராபிக் பரிமாற்றங்கள் ஊடாக வெளிநாட்டு நாணயங்களை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சட்டவிரோதமான முறையில் மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொட்டிகாவத்தை பிரதேசத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் டெலிகிராபிக் பரிமாற்ற முறை மூலம் 24.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை வெளிநாட்டுக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம்
சம்பந்தப்பட்ட நபரால் எந்தவிதப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படாமல் இந்தப் பணம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.