அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபர் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட் பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற கடும் விவாதங்களுக்கு மத்தியில், இன்று(08.08.2026) அதிகாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50க்கு 49 என்ற குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் இவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சட்டமா அதிபர் நியமனம்
முன்னாள் சட்டமா அதிபர் பாம் பாண்டி கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொட் பிளான்ச் இடைக்காலச் சட்டமா அதிபராகப் பணியாற்றி வந்துள்ளார்.
தற்போது செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அவர் அமெரிக்க நீதித் திணைக்களத்தின் நிரந்தரத் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

நீதித் திணைக்களம் வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தங்களின்றி சுயாதீனமாக இயங்க வேண்டும் என்ற வரலாற்று ரீதியான வழக்கத்தை மீறி, ஜனாதிபதி ட்ரம்பிற்கு மிகவும் நெருக்கமான ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து இரு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கான வரி விலக்கு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் ஆளும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே அதிருப்தி நிலவியது.
இருப்பினும், எழுத்துப்பூர்வமான சில உடன்பாடுகளின் பின்னர் குடியரசுக் கட்சி செனட்டர்களின் ஆதரவுடன் இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam