நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு..! சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
எதிர்வரும் காலங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் இருக்கை வார் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பை நேற்று (22.09.2026) பொலிஸ் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சாலைப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளரான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதிவீர வெளியிட்டுள்ளார்.
பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதற்கமைய, நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள பயணிகள் கட்டாயமாக இருக்கை வார் அணிந்திருக்க வேண்டும் எனவும், இருக்கை வார் வசதி உள்ள இருக்கைகளில் மாத்திரமே பயணிகள் அமர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பின்புற இருக்கையில் இரண்டு இருக்கை வாருகள் மாத்திரம் இருந்தால், அங்கு இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மூன்றாவது பயணி ஒருவர் இருக்கை வார் வசதியற்ற வகையில் நடுவில் அமர்ந்து பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பயணிக்கும் பயணிகள் தொடர்பில் சாரதிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு