ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Sri Lanka Government Law and Order
By Dhushi Sep 22, 2026 06:07 PM GMT
Report

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட 15 பேருக்கும், தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்தே குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று(22.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் இறுதி தீர்ப்பு

இதற்கமைய, முதலாம் குற்றவாளியான முகமது இப்ராகிம் முகமது நௌஃபர் (எனும் நௌஃபர் மௌலவி) என்பவருக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 240 ஆண்டுகளும், ஆறு மற்றும் ஏழாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

எட்டாம் குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒன்பது மற்றும் பத்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 220 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.

பதினொன்று மற்றும் பதினைந்தாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ஆண்டுகளும், பதினாறு மற்றும் பதினெட்டாம் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா 220 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன.

பத்தொன்பதாம் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

  

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள் என மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

அதே சமயம், ஒன்பது பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கொலை, பயங்கரவாதச் செயலில் ஈடுபடுவதற்கான சதித்திட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகளை அட்டர்னி ஜெனரல் (அரசுத் தரப்பு சட்டத்தரணி) பிரதிவாதிகள் மீது தாக்கல் செய்திருந்தார்.

2019 ஏப்ரல் 21 அன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இன்று இரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு காத்திருக்கும் தீர்ப்பு..!

இன்று இரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு காத்திருக்கும் தீர்ப்பு..!

100 நாட்களுக்கு மேல் ICUவில் இருந்த சுரேஷ் சலே! நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்

100 நாட்களுக்கு மேல் ICUவில் இருந்த சுரேஷ் சலே! நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US