8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் தொடர் மழை உடனான சீரற்ற வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, இரண்டாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேசங்கள் பெயரிடப்பட்டுள்ளன:
• நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுகள்.

• கண்டி மாவட்டம்: உடுதும்புர பிரதேச செயலகப் பிரிவு.
அத்துடன், முதலாம் கட்ட எச்சரிக்கையின் கீழ் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
• பதுளை மாவட்டம்: மீகஹகிவுல
• காலி மாவட்டம்: தவலம மற்றும் நாகொட
• நுவரெலியா மாவட்டம்: மதுரட்ட, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு மற்றும் ஹங்குரன்கெத்த
• மாத்தறை மாவட்டம்: பஸ்கொட
• மொணராகலை மாவட்டம்: வெல்லவாள
• கண்டி மாவட்டம்: தும்பனை மற்றும் மினிப்பே
மேலும், இதே முதலாம் கட்ட எச்சரிக்கை கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியாந்தோட்டை, புலத்கோஹுபிட்டிய, மாவன்னெல்ல, ருவன்வெல்ல, கேகாலை மற்றும் வரக்காபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் தொடகவெல, கொலோன்ன, வெலிகேபொல மற்றும் பலங்கொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கையானது நாளை இரவு 8.00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது... யாரும் அதைச் சொல்ல விரும்புவதில்லை: ட்ரம்ப் வெளிப்படை News Lankasri
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri