ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் திக்.. திக்.. நிமிடங்கள்..! குற்றவாளியின் கருத்தால் கதிகலங்கி நிற்கும் முக்கியஸ்தர்கள்
ஈஸ்டர் தாக்குதலில் ஆறாவது குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட நபர் தெரிவித்த கருத்துகளின் மூலம், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தர்கள் பலர் இன்னும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்ற விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோன்று, மற்றுமொரு குற்றவாளி தனது குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனக்கான தண்டனையைக் குறைத்துத் தருமாறு கோரியுள்ளதுடன், இந்தச் சம்பவத்துடன் தான் நேரடியாகத் தொடர்புபடவில்லை என்றும், இந்த வழக்கில் அரசியல் சதி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் சுரேஷ் சலே மௌனம் காத்து வருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பலர் தங்களது உறவுகளை இழந்து இன்றும் வேதனையில் தவித்து வருகின்றனர்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்த கருத்துகளைப் போன்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற கருத்துகளும் தற்போது வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல முக்கிய விடயங்களை ஆழமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் சிறை - கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு