ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளரிடம் இருந்து அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞர் ஒருவர், தனக்கு, ஜனாதிபதி ஊடகபிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வருவதாக முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டையடுத்து, கொழும்பின் புறநகர்-கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இருந்து ட்ரோன் கமரா உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
உள்ளக கணக்காய்வு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது காணாமல் போன உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளக கணக்காய்வும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, காணாமல் போன உபகரணங்கள் தொடர்பான தகவல்களை தாமே அதிகாரிகளுக்கு வழங்குவதாக கூறி, முன்னாள் பணிப்பாளர் நாயகத்திடம் இருந்து, தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, புகைப்படக் கலைஞர் முறையிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
