கண்டுபிடிப்பு தளமாக மாறிய வயிறு: பல மில்லியன் ரூபா இரகசியம் அம்பலம்
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியரா லியோன் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய சந்தேக நபர் சியரா லியோனின் பிரஜை என்பதுடன், துருக்கி எயார்லைன்ஸ் விமானமான TK 730 இல் நேற்று காலை இஸ்தான்புல் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
ஸ்கேனர் சோதனை
ஸ்கேனர் மூலம் பயணியை சோதனை செய்த அதிகாரிகள், அவரது உடலில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்ததாக தகவல் வெளியானது.
சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்து கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் 17 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள்
எவ்வாறாயினும், தனது வயிற்றில் அதிகமான போதைப்பொருள் மாத்திரைகள் இருப்பதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
