மகளை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தை : நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு
2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த மகளை சத்தம் போட விடாது தடுக்கும் முகமாக வன்மையான முறையில் தனது தந்தை குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.
10 ஆண்டுகள் கடுழிய சிறை
திடீரென தான் எழுந்த போது மகளையும் தனது கணவரையும் காணவில்லை எனவும், மதுபோதையில் மகளை தகாத முறைக்கு கணவன் ஈடுபடுத்தியதை தான் கண்டதாகவும், உடனடியாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைத்ததையடுத்து பொலிஸார் அதிகாலையில் வீட்டில் வைத்து கைது செய்ததாக சிறுமியின் தாயும் எதிரியின் மனைவியுமான குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.
இந்நிலையில், நீதிபதி இளஞ்செழியன் 10 வயது நிரம்பிய சொந்த மகள் மீது தந்தை மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவதே பொருத்தம் என தெரிவித்து 10 ஆண்டுகள் கடுழிய சிறையும் 2 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் இரு ஆண்டு கடூழிய சிறை மற்றும் 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அரச சட்டத்தரணி அனுசங்கன், சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நடாத்தி நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை எண்பித்துள்ளார் என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
