இலங்கையில் இன்னும் ஓரிரு வாரங்களில் மின்வெட்டு - வெளியான அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்னும் ஓரிரு வாரங்களில் மின்வெட்டு செய்ய வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
இன்று ( 17) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
மின்சார உற்பத்தி
''ஏப்ரல் 12ஆம் திகதிக்குள் டீசல் தீர்ந்துவிடும். அடுத்த பிரச்சினை என்னவென்றால்,பெட்ரோல் நுகர்வுக்கும், டீசல் மின்சார உற்பத்திக்கும் செல்கின்றது. நுரைச்சோலையில் தரம் குறைந்த நிலக்கரி காரணமாக நூற்று ஐம்பது மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது.

பொதுவாக, இந்த அமைப்புக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைப்பதில்லை. அவர்கள் மலிவான ஒன்றிலிருந்து தொடங்கி, நீர்மின் சக்தியில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர் சூரியசக்தி, காற்று, உயிரி எரிபொருள், பிறகு நிலக்கரி என படிப்படியாக முன்னேற வேண்டும். அதுவும் போதவில்லை என்றால், உலைகளுக்குச் செல்வார்கள்.'' அதுவும் போதவில்லை என்றால் டீசலுக்குச் செல்வார்கள்.
இந்த நிலைமையின்படி, நுரைச்சோலையில் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால், இன்று ஒரு லிட்டர் எண்ணெய் கூட தேவைப்படாது. ஆனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாரத்திற்கு பெருந்தொகை டீசலும் தேவைப்படுகிறது.
எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் மின்வெட்டு செய்ய வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்