QR குறியீட்டு பதிவில் புதிய சிக்கல்! ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு 'QR 'குறியீட்டிற்காக பதிவு செய்வோர் ஒரு அடையாள அட்டை எண்ணின் கீழ் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறியுள்ளார். "ஒரு அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி எண்ணுக்கு ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
வாகனங்களை மாற்றியுள்ள பலர்
அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, பலர் வாகனங்களை மாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர்களால் வாகனங்களைப் பதிவு செய்ய முடியவில்லை. இந்த சமயத்தில், ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவருவதற்காக நாங்கள் QR முறையை கொண்டுவந்தோம். ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இருந்தால், BRN எனப்படும் ஒரு தனிப் பிரிவு உள்ளது.
நாட்டில் நெருக்கடி நிலவும் இக்காலத்தில், ஒரு தனிநபர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்த விரும்பமாட்டார் என்பதே எனது தனிப்பட்ட கருத்து." என்றும் தெரிவித்துள்ளார்.
தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்
| QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/ |