தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்

Food Shortages Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Wasantha Samarasinghe Iran-Israel War
By Dhayani Mar 17, 2026 06:59 AM GMT
Report

புதிய இணைப்பு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கள-தமிழ் புத்தாண்டு நெருங்கும் வேளையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலின் விளைவுகளால் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என்று நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமை காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். கருத்துத் தெரிவிக்கையில்,

QR குறியீட்டினை பதிவு செய்ய இங்கே அழுத்தவும்.. https://fuelpass.gov.lk/ 

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

வான்பரப்பை அவசரமாக மூடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம்! நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ட்ரோன்கள்

விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் | Changes In Prices Of Essential Commodities

இந்நிலையில், 80 சதவீதமான உருளைக்கிழங்கு, 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதமான சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் மாத்திரமல்லாமல் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

குறிப்பாக உருளைக்கிழங்கு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இறக்குமதியே செய்கிறோம். போதுமானளவு அரிசி இருப்பில் இருக்கிறது. 03, 04 மாதங்களுக்கு தேவையான அரிசியை விட அதிக அரிசி உற்பத்தி எமது நாட்டில் தற்போதும் உற்பத்தி செய்யப்படுகிறது.

 எரிபொருள் கப்பல்கள் காலதாமத பாதிப்பு 

80 சதவீதமான உருளைக்கிழங்கு , 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதம் சீனி போன்றன வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

நெத்திலி போன்ற உலர் மீன்களுக்கும் நேரடித் தாக்கம் ஏற்பட்டது. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

தாமதமாகும் எரிபொருள் கப்பல்கள்! சிங்கள-தமிழ் புத்தாண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் | Changes In Prices Of Essential Commodities

எனவே, விநியோக வழிகளில் இருக்கும் நிலைமை சகல நாடுகளுக்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. அதனால், விலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன

. நாளாந்தம் இது தொடர்பில் கலந்தாலோசித்து நுகர்வோருக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

இவ்வாறான முகாமைத்துவப் பணிகளை முன்னெடுத்தாலும் நாளாந்தம் இடம்பெறும் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்த முடியும். எரிபொருள் கப்பல்கள் காலதாமதமானால் பாதிப்பு ஏற்படக் கூடும். இருந்தபோதும் ஏப்ரல் மாதம் வரை கிடைக்க வேண்டிய 04 கப்பல்கள் எரிபொருள் விநியோகத்துக்கான உறுதிப்பாட்டை அளித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.  

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US