வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் மோதல்
வவுனியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கு இடையில் மோதல் காரணமாக நால்வர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோதலானது இன்று (23.01.2024) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்து தரித்து நின்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் வருகை தந்து புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற போது இரு பேருந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், இ.போ.சபை பேருந்தின் லைட் உடைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் அரச, தனியார் பேருந்து ஆகிய இரு பேருந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேருந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |