பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்! இருவர் பதவி விலகல்
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து பேன்னி மோர்டாண்ட் விலகியதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்க இருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தற்போது பதவிறே்றுள்ளார்.இவர் பிரித்தானியாவின் 57 வது பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதை தொடர்ந்து, நீதித்துறை செயலாளர் பிராண்டன் லூயிஸ் மற்றும் வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் இருவரும் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் இருவரின் நெருங்கிய கூட்டாளியான வணிக செயலாளர் ஜேக்கப் ரீஸ்-மோக் ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் பணியாற்ற எதிர்பார்க்கவில்லை என முன்பே தெரிவித்து இருந்தார்.
An honour to have been one of the longest serving Cabinet ministers - having done eight ministerial roles, in five departments, under four Prime Ministers.
— Brandon Lewis (@BrandonLewis) October 25, 2022
The new PM will have my support from the back benches to tackle the many challenges we face - as a Party and as a country. pic.twitter.com/ulZjpcHkWk
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை ரிஷி சுனக் தற்போது பெற்றுள்ளார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், ரிஷி சுனக்விற்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
பிரதமராக ரிஷி, பிரிட்டனின் பொருளாதாரத்தை நிலை கொண்டுவரத் திட்டங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பொருளாதார மேம்பாடு, பண வீழ்ச்சியை சரி செய்தல், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டுவருதல் என்று பல பொறுப்புக்கள் தற்போது ரிஷி வசம் உள்ளது.
பிரதமரின் உரை
இதற்கமைய பிரதமராக பதவியேற்ற ரிஷி தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.
தனது உரையில்,“தற்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. லிஸ் டிரஸ் மீது தவறில்லை. ஆனால் சில தவறுகள் நடந்துள்ளன. பொருளாதார ஸ்த்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை இந்த அரசாங்கத்தின் அடிநாதமாக வைப்பேன்.மேலும் போரிஸ் ஜான்சனுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.”என கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமரானார் ஆசியாவின் ரிஷி சுனக் |
இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவின் வரலாற்றில் முதல் பிரதமராகும் இந்தியர்! |
பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் தெரிவானதும் பவுண்டின் மதிப்பு திடீர் மாற்றம் |
பிரித்தானிய பொருளாதாரம் தொடர்பில் ரிஷி சுனக் கடுமையான முடிவுகளை முன்னெடுப்பாரா...! |
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி |
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவான ரிஷி சுனக் முன்வைத்துள்ள வேண்டுகோள் |
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பம்-இந்தியா மற்றும் ஆபிரிக்க பின்னணி |
இலங்கையர்களின் ஆன்மாவில் கலந்த இனவாதம்:ரிஷி சுனக் பிரதமரானதன் காரணம் இதுதான்..! |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam
