பிரித்தானியாவின் பிரதமராக ரிஷி சுனக் தெரிவானதும் பவுண்டின் மதிப்பு திடீர் மாற்றம்
பிரித்தானியாவில் சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்தது.
இதனை தொடர்ந்து பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட கடும் நெருக்கடி மற்றும் எதிர்ப்பு காரணமாக பிரதமர் பதவியிலிருந்து லிஸ் ட்ரஸ் விலகியிருந்தார்.
இதனை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் தேதர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரதமர் போட்டியில் போட்டியிட்டு பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் லிஸ் ட்ரஸ் இராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சற்றே உயர்ந்த பவுண்டுன் மதிப்பு, பின்னர் மீண்டும் குறைந்தது.
ஆனால், தற்போது ரிஷி சுனக் பிரதமராக தெரிவான நிலையில், மீண்டும் பவுண்டுன் மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் 1.11 டொலர்களாக இருந்த பவுண்டின் மதிப்பு, இன்று, திங்கட்கிழமை, 1.135 டொலர்களாக உயர்ந்துள்ளது. பொருளாதாரவியல் அமைப்பு ஒன்றில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றும் Megan Greene என்பவர் இது குறித்துக் கூறும்போது, ரிஷி சுனக் பிரதமராக தெரிவானமை பங்குச் சந்தைகளை அமைதிப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன், பிரித்தானியாவின் நிலைமை முதலீடு செய்ய இயலாத நிலையில் காணப்பட்டதாகவும், பிரதமராக ரிஷி இருப்பதால், அவர் எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் பங்குச் சந்தைகளை அமைதிப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 17 மணி நேரம் முன்

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
