அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்
அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர் முழுப் பகுதியையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (PoK) மற்றும் அக்சாய் சின் உள்ளிட்ட பகுதிகளுடன் இந்திய எல்லைக்குள் சேர்த்துக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடம், இந்தியா–அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக (tariff) ஒப்பந்தம் தொடர்பான விளக்கப்படமாக வெளியிடப்பட்டதாகும்.
நேரடி அரசியல் தாக்கம்
அதில், அக்சாய் சின் பகுதியும் இந்தியப் பகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை, பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு நேரடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜம்மு–காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் முழுமையாக இந்திய எல்லைக்குள் இணைக்கப்பட்டுள்ள இந்த சித்திரிப்பு, பிராந்திய விவகாரங்களில் வோஷிங்டனின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இது, இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்துடன் ஒத்துபோகும் வகையிலும் அமைந்துள்ளது.
வரைபடம்
இந்த முன்னேற்றம், அமெரிக்காவுடன் தூதரக உறவுகளை தீவிரப்படுத்த பாகிஸ்தான் முயன்று வரும் நிலையில் நிகழ்ந்துள்ளதால், இஸ்லாமாபாதுக்கு இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, PoK மீது உரிமை கோரும் பாகிஸ்தானுக்கு இந்த வரைபடம் அவமானகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், லடாக்கின் வடகிழக்கு பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியும் இந்தியப் பகுதியாக காட்டப்பட்டுள்ளமை, சீனாவின் நிலைப்பாட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா தனிப்பட்ட விளக்கம் எதையும் வெளியிடாததும், இந்த வரைபடத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.