தையிட்டி திஸ்ஸ விகாரையின் காணி உரிமம் தொடர்பில் விகாராதிபதி விடுத்துள்ள கோரிக்கை
சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள், தமது காணி உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயருக்கு மாற்றம் செய்தால், அந்தக் காணியை உரிமையாளர்களின் பெயருக்கு உரிமை மாற்றி வழங்க தயாராக இருப்பதாக நயினாதீவு நாகதீப விகாராதிபதி தெரிவித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கமைய இன்று(08.05.2026) நயினாதீவு நாகதீப விகாராதிபதியை நேரில் சென்று சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமம் மாற்ற கோரப்பட்ட கடிதம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கமைய நயினாதீவு நாகதீப விகாராதிபதியை நேரில் சென்று இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தோம்.

இதன்போது, தேரரிடம் எழுத்து மூலம் தையிட்டி விகாரைக்குரிய காணியை சட்டவிரோதமாக கட்டப்பட்ட காணிக்கு பதிலாக அதேயளவான காணியை விகாரைக் காணியிலிருந்து காணி உரிமையாளர்களுக்கு உரிமம் மாற்றி எழுதி தரவேண்டும் என காணி உரிமையாளர் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.
அதற்கு தேரர், “தரமுடியும் ஆனால் சட்ட விரோத விகாரை காணி உரிமையாளர்கள் தங்கள் காணியை நாகதீப விகாரை பெயரில் எழுதி தரவேண்டும். மாறாக, அவர்கள் அதனை எழுத்து மூலம் எழுதி தர வேண்டும்” என்றார்.
அதற்கமைய நாங்கள் கடிதம் எழுதி கொடுத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
சமர்ப்பிக்கப்படவுள்ளது தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவை பத்திரம்


கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam