பிரித்தானியாவின் புதிய பிரதமரான ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி
பிரித்தானிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்கிற்கு, கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டின் பிரதமராக சற்று முன் போட்டியின்றி தேர்வானார். அவர் விரைவில் பிரித்தானியாவின் மிக உயரிய பதவியில் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையகத்தில் ரிஷிசுனக் உரையாற்றியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
நாட்டு மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதி
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதற்காகவும், கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பணிவுடன், பெருமையும் அடைகிறேன்.
நான் விரும்பும் கட்சிக்கும், என் நாட்டிற்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம். பிரித்தானிய மக்களுக்காக நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நான் நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
நாட்டிற்காக லிஸ் டிரஸ்ஸின் அர்ப்பணிப்பான பொது சேவைக்காக நான் அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்.பிரித்தானியா ஒரு சிறந்த நாடு, ஆனால் நாம் ஆழமான பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம்.நமக்கு இப்போது ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் தேவை.
நம் கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதை நான் எனது அதிகபட்ச முன்னுரிமையாகக் கருதுகிறேன். அதுதான் சவால்களை சமாளித்து, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளா.
பொருளாதாரம் தொடர்பில் முக்கிய முடிவுகள்
இந்த நிலையில், பொருளாதாரம் தொடர்பில் இந்த வாரம் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், யுனிவர்சல் கிரெடிட் பயனாளர்கள் உட்பட மில்லியன் கணக்கானோர் தங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 6 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
