இலங்கையர்களின் ஆன்மாவில் கலந்த இனவாதம்:ரிஷி சுனக் பிரதமரானதன் காரணம் இதுதான்..!
பிரதமர் ரிஷி சுனக்கின் நாட்டில் நிறவாதம் தோலில் இருக்கிறது. ஆகவே அதை மாற்றி எடுக்க முடிகிறது. ஆனால், இங்கே இனவாதம் ஆன்மாவில் கலந்துள்ளது அதனால் தான் நம்நாட்டில் நமக்கு முதலிடம் தர தயங்குகிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆன்மாவில் கலந்த இனவாதம்
தனது முகநூல் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,“எல்லா சிங்கள தேசிய கட்சிகளிலும் இப்படிதான். மற்றபடி, இங்கேயும் ரிஷி சுனக், பராக் ஒபாமா, அப்துல் கலாம் போன்றோர் இருக்கிறோம். இதற்கு சிங்கள மக்களை மட்டும் குறை கூறி பயனில்லை. தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இன்னமும் அரசியல் விழிப்புணர்வு இல்லை.
நேற்று தீபாவளி பண்டிகை அதிகாரபூர்வ நிகழ்வுகள், எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் காலையிலும், ஜனாதிபதி செயலகத்தில் மாலையிலும் நடைபெற்றன.
இருவரையும் நன்கு அறிந்த நண்பர், கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு அழைப்புகள் வந்தன. நான் கலந்துக்கொண்டேன். அங்கும் போய் தீபாவளியை தவிர, மக்கள் பிரச்சினைகளைத்தான் பேசினேன்.
இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவின் வரலாற்றில் முதல் பிரதமராகும் இந்தியர்! |
அரசியல் விழிப்புணர்வு இல்லை
இதைக்கூட சரியாக புரிந்துக்கொள்ள, நம்ம சில அறிவுக்கொழுந்துகளுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லை. இப்படியான பொது நிகழ்வுகளில், வெவ்வேறு கட்சிகளை சேர்ந்த சிங்கள அரசியல்வாதிகள் சந்தோஷமாக கலந்துக்கொண்டு உரையாடுகிறார்கள். இதை பார்த்தும் இவர்களுக்கு அறிவில்லை.
உண்மையில், தீபாவளியும் அதுவுமா? வீட்டில் இல்லை! எங்கே சுற்றுகிறீர்கள்? என வீட்டில் மனைவியும், மகனும்தான் கோபிக்க வேண்டும். தீவிர பக்தர்களான, அவர்கள் இருவரும் தம்பாட்டுக்கு வெள்ளவத்தை கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். மக்கள் மட்டுமா? நம்ம அரசியல்வாதிகளும் அப்படிதான்.
மனோ எப்படி இந்த இடத்துக்கு வந்தார்? அதற்கு பின் கடும் உழைப்பு, விலைபோகாத நேர்மை இருக்கிறதே என்பதை கண்டறிந்து, தம்மையும் அதுபோல் வளர்த்துக்கொள்வோமே என எண்ணாமல், தமிழ் அரசியல்வாதிகளே அறிவில்லாமல் நமக்கு குழி வெட்டுகிறார்கள் என்பதால், மக்களை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? ஆகவேதான் எனது பாதை எப்போதும் மலர்பாதை இல்லை. கரடு முரடான முள்பாதை என்கிறேன்.”என பதிவிட்டுள்ளார்.