குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காணாமற்போன இளைஞனின் சடலம் மீட்பு
குளியாப்பிட்டிய (kuliyapitiya) பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மாதம்பை பிரதேசத்தின் பணிரென்டாவ வனப்பகுதிக்குள் இருந்து இளைஞனின் உடல் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டிய, வெரளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான இளைஞன் ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.
அவர் தனது காதலியைச் சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்த காரணத்தினால், காதலியின் பெற்றோர் அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது.
குடும்பத்தினர் திடீரென தலைமறைவு
அத்துடன் குறித்த இளைஞனின் காதலி உள்ளிட்ட அவரது பெற்றோர், குடும்பத்தினர் திடீரென்று பிரதேசத்தை விட்டும் தலைமறைவாகி இருந்தமை இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.
இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் காதலியின் உறவினர் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்த போது இன்றையதினம் காணாமல் போன இளைஞனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
