வேலையில்லா பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க கோரிக்கை
பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்த எத்தனையே பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர் அவர்கள் கூறுகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
இந்த வேலைவாய்ப்பை தங்களுக்கு கிடைத்தால் எந்த பிரச்சினையும் இன்றி இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியும் எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும் இவர்கள் நினைத்த வேலைவாய்ப்பை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்கின்றனர்.
எனவே உண்ணாவிரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தயவாக கேட்டுக் கொள்கிறோம் வேலையில்லா பட்டதாரிகள் என வீதிக்கு இறங்கி போராடிய போது உங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது எனவே வழங்கப்பட்ட இந்த தொழிலை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு முடியுங்கள்.
இப்போது ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் இன்று எத்தனையோ பட்டதாரிகள் அரச வேலையின்றி மேசன் மற்றும் கூலி தொழில்களுக்குச் செய்கின்றனர்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri